NEET 2021: பதிவு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது.
NEET தேர்வு தொடர்பான ஒரு முக்கிய புதுப்பிப்பை நேற்று தேசிய தேர்வு முகமை அளித்தது. தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
NEET Big Update: தேசிய தேர்வு முகமை (NTA) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3, 2021) NEET (UG)-2021 தேர்வுக்கான பதிவு தேதியை (Registration Date) நீட்டித்தது. நீட் (UG) -2021 க்கான விண்ணப்ப தேதியை ஆகஸ்ட் 6 -லிருந்து ஆகஸ்ட் 10 ஆக (05:00 PM) NTA நீட்டித்தது.
விண்ணப்பக் கட்டணத்தை ஆகஸ்ட் 10 (11:50 PM) வரை செலுத்தலாம் என்று NTA தெரிவித்துள்ளது.
BSc (Hons) நர்சிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ள மாணவர்களும் NEET (UG)-2021-க்கு விண்ணப்பிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான வசதி ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை (02:00 PM) திறந்திருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது.