குடும்ப தலைவிக்கு ரூ.1,000 – ரேஷன் கார்டில்.
குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு இதுவரை 99 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. மேலும் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை முதலமைச்சர் அறிவிப்பார் என்று உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளுக்கு பொருள் வழங்குவதற்கான சிவில் சப்ளைஸ் டெண்டர் விவகாரத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் நியாயவிலைக்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.