வலிமை மாஸ் பாடல்; அஜித் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம்

வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடல் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது. இதற்கிடையில் வலிமை படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்த நிலையில் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் (Naanga Vera Madhiri) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடல் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். #Valimai, #NaangaVeraMadhiri, #Ajith, #HVinoth, #Yuvan உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. 

Leave a Reply

Your email address will not be published.