ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி.

ராம் இயக்கத்தில் அடுத்ததாக நிவின் பாலி நடிக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது.  

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நிவின் பாலி (Nivin Pauly). நேரம், பிரேமம் படங்களின் மூலம் தமிழக மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நிவின் பாலி. பிரேமம் படம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இயக்குனர் ராமை (Director Ram) பற்றி தமிழக மக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த தேவையில்லை. தனது அழுத்தமான கதையின் மூலம் தான் சொல்ல வரும் கருத்தை மக்கள் மனதில் பதித்து விடுவார். 

இந்நிலையில் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.