புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியானது.
சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கூட்டணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா வெளியாக இருக்கிறது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதற்கிடையில் புஷ்பா படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இதன் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.