புதிய ரேஷன் அட்டை: அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்.
தமிழகத்தில் புதிதாக ரேஷனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கும் விதத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம் ஒட்டன்சத்திரம் ஆகிய 3 இடங்களில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரத்தில் 697 குடும்ப அட்டைகள் உட்பட மூன்று இடங்களிலும் 1500 நபர்களுக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது., தமிழகத்தில் பல ஆண்டுகளாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருந்தது. முதல்வராக பதவி ஏற்றப்பின் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 தினங்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.