ட்விட்டரின் ஒரு அம்சமாக இருந்து வந்த ஃப்ளீட்ஸ் (Fleets) இன்று முதல் நீக்கப்படுகிறது.
இந்த அம்சம் குறித்த ஆர்வம் பயனர்களுக்கு மத்தியில் குறைந்துவந்த நிலையில் Fleets-ஐ ட்விட்டர் தனது பக்கத்தில் இருந்து நீக்குகிறது.
2006 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விதமான புதிய அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்து முக்கிய நிகழ்வுகளுமே டுவிட்டரில் அறிவிக்கப்படுகின்றன. அனைத்து சமூக வலைதளங்களிலும் முக்கியமானதாக ட்விட்டர் கருதப்படுகிறது.
உலகளவில் ட்விட்டரில் (Twitter) கணக்கு வைத்திருக்காத பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு ட்விட்டர் அனைவரது வாழ்வோடும் பின்னிப் பிணைந்து விட்டது.
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ட்விட்டர் fleets என்ற புதிய வசதியை ட்விட்டர் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது போல ட்விட்டரிலும் இந்த வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. ஆனால் பயனர்களிடம் இருந்து போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் இந்த வசதியை இன்றுடன் நிறுத்தப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.