டி.ஏ. அரியர் தொகை கிடைக்குமா? கிடைக்காதா?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் இந்த அரியர் தொகை கிடைக்காது என்று உறுதியாக கூறி விட முடியாது.

1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வை பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஜூலை 1 முதல், 17% க்கு பதிலாக 28% DA மற்றும் DR கிடைக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் இன்னும் மத்திய அரசு ஊழியர்களுக்கு திருப்தி இல்லாமல் இருந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை (Arrear Amount) வழங்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் இந்த அரியர் தொகை கிடைக்காது என்று உறுதியாக கூறி விட முடியாது. இது குறித்து அரசுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒன்றரை வருடங்கள் முடக்கப்பட்ட அகவிலைப்படி (Dearness Allowance) நிலுவைத் தொகை பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஜூன் 2021 வரை அகவிலைப்படி முடக்கப்பட்டதால், அதன் அரியர் தொகையை அளிப்பது பற்றி பேச எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜேசிஎம் செயலாளர் (பணியாளர் பக்கம்) தேசிய கவுன்சில் ஷிவ் கோபால் மிஸ்ரா, அகவிலைப்படியை அதிகரித்ததற்கு (DA Hike) அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால், நிலுவைத் தொகையைப் பற்றி பேசப்படாதது குறித்து அவர் சிறிது வருத்தப்பட்டார். மிஸ்ரா கூறுகையில், ‘ஒன்றரை வருட நிலுவைத் தொகை (18 மாதங்கள் டிஏ அரியர்) இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலை மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்கம் நிச்சயமாக பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் ஊழியர்கள் என இவருக்கும் நன்மை பயக்கும் ஒரு வழி காணப்படும்.’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.