காதல் ஜோடியின் திருமண கனவு கல்லறையில் நிறைவேறியது..

முகேஷ் – நேஹா இருவருமே ஒரே சாதியை மட்டுமல்ல ஒரே உட்பிரிவையும் சேர்ந்தவர்கள். இதுவே அவர்களின் திருமணத்துக்கு தடையாகவும் இருந்திருக்கிறது.

உயிருடன் இருந்த போது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், காதல் ஜோடியின் தற்கொலைக்கு பின்னர் கல்லறையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுடைய கனவை நிறைவேற்றியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தின் வேட் எனும் கிராமத்தில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 1) மரக்கிளையில் இளவயது ஆண் மற்றும் பெண் என இருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களால் திருமணம் செய்து கொள்ள இயலாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி அருகே இருக்கும் பலாத் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முகேஷ் சோனவானேவுக்கு 22 வயது, அவர் நேஹா தாக்கரே எனும் 19 வயது பெண்ணை காதலித்து வந்தார். இருவருமே உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.