அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக் போட்டிகளில், ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆடும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கனவு கனவாகவே இருந்து விட்டது. உலக சாம்பியன் அணியான பெல்ஜியத்திடம் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

ஒலிம்பிக் போட்டிகளில், ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆடும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கனவு கனவாகவே இருந்து விட்டது. உலக சாம்பியன் அணியான பெல்ஜியத்திடம் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. எனினும், செவ்வாயன்று நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்திற்காக போட்டியிடும்.

போட்டியில் அதிக கோல்களை அடித்துள்ள அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ் (19 வது, 49 வது, 53 வது நிமிடங்கள்) ஹாட்ரிக் கோல்களை அடித்தார். அதே நேரத்தில் லோக் லியூபர்ட் (2 வது நிமிடம்) மற்றும் ஜான்-ஜான் டோஹ்மென் (60 வது) ஆகியோரும் கோல்களை அடித்து பெல்ஜியம் அணி இறுதிப் போட்டிக்கு செல்வதை உறுதி செய்தனர்.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் (7 வது நிமிடம்) மற்றும் மன்தீப் சிங் (8 வது) ஆகியோர் இரு கோல்களை அடித்தனர். இதற்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் (Olympic Games) இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றது.

பெல்ஜியத்தின் நான்கு கோல்கள் பெனால்டி கார்னர் மூலம் வந்தன. இந்திய அணியை பெல்ஜியம் அணி முழுமையான பதட்டத்தில் வைத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published.