ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

இங்கிலாந்தில் ஷேன் வார்னேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினர் மற்றும் வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது

சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் The Hundred எனும் உள்ளுர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டிருக்கும் நிலையில், அந்த அணிகளுள் ஒன்றான London Spirit-ன் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே செயல்பட்டு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 1) காலையில் ஷேன் வார்னேவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக லார்ட்ஸ் மைதானத்தில் Southern Brave மற்றும் London Spirit அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டிக்காக ஷேன் வார்னே நேற்று மைதானத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.