தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 28 அன்று நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அரசு (Central Government) இதுபோன்ற எந்த விஷயத்தைப் பற்றியும் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

7 வது மத்திய ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பில் ஊதியத்தை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அனைத்து வகை ஊழியர்களுக்கும் 2.57-இன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இது மட்டுமல்லாமல், அகவிலைப்படி அதிகரிப்போடு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளதால், HRA அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.

அரசாங்க உத்தரவின்படி, எச்.ஆர்.ஏ நகரங்களின்படி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது – X, Y மற்றும் Z. திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். அதேபோல் Y வகை நகரங்களுக்கான எச்ஆர்ஏ அடிப்படை ஊதியத்தில் 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு இது அடிப்படை ஊதியத்தில் 9% ஆகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.