கடைகள், வழிபாட்டு தலங்களை மூடும் அரசின் முடிவு வரவேற்கதக்கது: OPS
தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது.
கொரோனா 3ம் அலை (Corona Third Wave) பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன் தினம், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த முடிவுகளை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். தொற்று பரவலை ஆரம்ப கட்டதிலேயே கட்டுப்படுத்தவும், மூன்றவாது அலை ஏற்படாமலிருக்கவும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆடி மாதத்தில் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கோவில்களில் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆடி மாதத்தில், ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்க, ஆடி வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலயில் தொற்று பரவும் அபாயம் மிகவும் அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.