JBM Auto limited ஊழியர்கள் போராட்டம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் செயல்பட்டு வரும் JBM auto limited நிறுவனத்தில் சுமார் 95 நிரந்தரத் தொழிலாளிகள் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் கடந்த 2018 மற்றும்2019ஆகிய ஆண்டுகளுக்கு எந்த ஒரு ஊதிய உயர்வு தொடர்ந்து இதுநாள் வரை வழங்காமல் நிறுவனமானது செயல்பட்டு வந்தது . நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் இதனை கோரிக்கையாக கேட்டும் செவிமடுக்காமல் இருந்ததால் இவர்கள் அனைவரும் INTUC தொழிற் சங்கத்தில் இணைந்து சம்பள உயர்வை இருங்காட்டுக்கோட்டை துணை ஆணையர் முன்பு வழக்காக பதிவு செய்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். நிறுவனமானது தன்னிச்சையாக செயல்பட்டு சட்டவிரோதமாக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. தொழிலாளர் கோரிக்கை மதிக்காமலும் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் இருங்காட்டுக்கோட்டை அவர்களின் அறிவுரையை மதிக்காமல் சட்டவிரோதமாக ஜேபிஎம் நிர்வாகம் செயல்பட்டு வந்தது .
எனவே எங்களது சட்டபூர்வமான வேலைநிறுத்தம் தொடர்ச்சியாக 157 நாட்களுக்கு மேல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசும் மற்றும் தொழிலாளர் நலத்துறையும் இந்த விஷயத்தில் தலையிட்டு நல்லதொரு தீர்வு வராவிட்டால் எங்களது இந்த போராட்டம் தொடரும் என்பதை சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்