ஊரடங்கு தளர்வு குறித்து முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு தளரவில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன்படி தற்போது ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.