இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு நல்ல செய்தி: H-1B விசா குறித்த முக்கிய அறிவிப்பு
அமெரிக்கா இரண்டாவது முறையாக விசாவுக்கான லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது.
, அமெரிக்கா (America) இரண்டாவது முறையாக லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது. முதல் லாட்டரியில் இந்த விசா பெற முடியாத நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இது மற்றொரு வாய்ப்பை வழங்கும்.
இந்த விசாவிற்கான (Visa) அதிக தேவை இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள், சிறப்பு தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.