ஆகஸ்ட் 3 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து 3 ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.