சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…
நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் இருக்கிறாராம்.கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்திருக்கிறது. பின்பு மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். உடனேயே கோமாவுக்கு சென்றுவிட்டார்.
கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகிறார்கள்.