ஓட்டுநர் உரிமம், RC உள்ளிட்ட ஆவணங்களின் வேலிடிடி மேலும் நீட்டிப்பு…
ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் பதிவு (RC), பிட்னஸ் சர்டிபிகேட் (Fitmess Certificate) உட்பட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அளவை (Validity) மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.
இனி, ஓட்டுநர் உரிமம் (DL), ஆர்.சி உள்ளிட்ட ஆவணங்கள் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 1, 2020 அன்று காலாவதியான, லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக புதுப்பிக்க முடியாத இந்த ஆவணங்கள் இப்போது 2021 செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்.
இது தொடர்பான உத்தரவுகள் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து தொடர்பான சேவைகளில் குடிமக்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் பணிபுரியும் போக்குவரத்து மற்றும் பிற அமைப்புகள் எந்தவிதமான துன்புறுத்தல்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளாத வகையில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.