பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்…
பொறியியல் கல்லூரிகள் ஆன்லைனில் ஆகஸ்ட் 18 முதல் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை (Under Graduate) மற்றும் முதுநிலை (Post Graduate) மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.
அதேபோல் நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும், டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 19 ஆம் தேதி 2022 அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.