வெளியானது மணிரத்னத்தின் நவரசா ட்ரெய்லர்..
மணிரத்னத்தின் நவரசா ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கி உள்ள ஆந்தாலஜி வெப் தொடர் நவரசா. நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் நவரசா (Navarasa) ஆந்தாலஜி வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மேலும் இதில், சூர்யா (Suriya), விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர். முன்னதாக இந்த ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் நவரசா ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.