தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) பொய்யாமொழி முக்கிய அறிவிப்பை அளித்துள்ளார். அதன்படி., தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும் சிஎஸ்ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஓவடியா விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.