‘தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா

கொரோனா பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடு நெறிமுறைகளின் படி மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி, ‘தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

ஜாதி,மத,இன வேறுபாடின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்த வருடம் 439-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கோவிலில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் மாதாவின் உருவம் அச்சிடப்பட்ட கொடி மற்றும் வண்ண,வண்ண கொடிகள் ஏற்றப்பட்டன.

தொடங்கு தினசரி காலை மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.

பத்து நாட்களும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள்

சென்று மாதாவை வணங்க அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நற்கருணை பவனி, மாதா சொரூப சப்பர பவனிக்கு இந்தாண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமும் திருப்பலிக்கு பின் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஒருவழிப் பாதையில் கோயிலுக்குள் வரிசையாக தரிசனம் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெறிமுறைகள் கடைபிடிப்பதையும் மக்கள் கூடுவதை தவிர்க்கவும்

ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆராதனைகள் மற்றும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published.