2 நாட்களில் 150 கிலோ குட்கா பறிமுதல்- வழக்குப் பதிவு செய்யாத போலீசார்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.  மேலும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 150 கிலோ  குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களில் 150 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் குட்கா தொடர்பாக வழக்கு பதிவு செய்யாத காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புகையிலை இல்லாத மாநிலமாக தமிழத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் குட்கா பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. எந்த கடையிலாவது குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தார்கள் என்றால், முதலில் நோட்டீஸ் கொடுக்கப்படும். அதன்பிறகும் விற்றால் அபராதம் விதிக்கப்படும். அதனைத்தொடர்ந்து அந்த கடை   மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்படும்.

அதிகமாக இளைஞர்களை பாதிக்கும் விஷயம் என்பதால், பள்ளி, கல்லூரி வாயில்கள் முன்பும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் புகையிலை பொருட்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உருவ பொம்மைகள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள வணிகர்களை ஒன்றிணைத்து இதுபோன்ற ‘புகையிலை பொருட்களை விற்பனை செய்யமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.