Vaccination: கொரோனா தடுப்பூசியை முறையாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
- கொரோனா தடுப்பூசியை முறையாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
- தடுப்பூசியை வீணடித்த மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடம் பிடித்துள்ளது
- தமிழகத்திற்கு மேலும் மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது, இந்தியாவில் மே 1 முதல் ஜூலை 13 வரை 41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி (Vaccine) போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிகபட்சமானவர்களுக்கு தடுப்பூசி போட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை அடுத்து, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் சிறப்பாக செயல்பட்டுள்ளன.