Personal Loan வரம்பை அதிகரித்தது ரிசர்வ் வங்கி
வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.
RBI New Rules: வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது (RBI New Rules For Loan). இந்த புதிய விதியின் கீழ், வங்கிகளின் இயக்குநர்கள் குழு (Board Directors) மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கடன் வரம்பு ரூ .5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி இயக்குனர்களுக்கு தனிப்பட்ட கடன் வரம்பு ரூ .25 லட்சமாக இருந்தது. இது பற்றி விரிவாகக் காணலாம்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் சொந்த வங்கி அல்லது பிற வங்கிகளின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் அல்லது பிற இயக்குநர்கள் ஆகியோரின் கணவன் / மனைவி மற்றும் அவர்களை சார்ப்துள்ள குழந்தைகளைத் தவிர வேறு எந்த உறவினருக்கும் ரூ .5 கோடிக்கு மேல் கடன் வழங்க அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.