Chennai Zoo: 13 சிங்கங்களுக்கும் கொரோனா இல்லை, பரிசோதனை முடிவுகள்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் அனைத்திற்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
- வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் 13 சிங்கங்களுக்கும் கொரோனா இல்லை
- தீவிர கண்காணிப்பில் சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன
- கொரோனா தொற்று விலங்களுக்கு எப்படி ஏற்பட்டது என தீவிர கண்காணிப்பு.
சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் 15 ஆசிய சிங்கங்கள் இருந்தன, அவற்றில் பத்து சிங்களுக்கு COVID-19 பாஸிடிவ் என்று தெரியவந்தது. கொரோனாவுக்கு ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் பலியாகின.
வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (Arignar Anna Zoological Park(AAZP), பராமரிக்கப்படும் சிங்கங்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனம் (National Institute of High Security Animal Diseases (NIHSAD) க்குக் அனுப்பப்பட்டிருந்தது.