10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி 12 ஆம் வகுப்பு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. 

புதுடில்லி: இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி 12 ஆம் வகுப்பு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் ஐசிஎஸ்இ-க்கு 99.98% ஆகவும் ஐஎஸ்சி-க்கு 99.76% ஆகவும் உள்ளது.

டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் (NCR) ஐ.சி.எஸ்.இ முடிவுகளில் 100% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளது. ஐ.எஸ்.சி வகுப்பு 12 முடிவுகளில், டெல்லியில் 99.93% பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டில், 2,909 மாணவர்களும் 2,554 மாணவிகளும் ஐ.சி.எஸ்.இ தேர்வுகளை எழுதினர். ஐ.எஸ்.சி தேர்வுகளை இந்த ஆண்டு 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் எழுதினர்.

Leave a Reply

Your email address will not be published.