இந்தியாவில் டெஸ்லா கார்களை விரைவில் கொண்டு வர ஆசைதான்
பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
- பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
- டெஸ்லா கார்களை இந்தியாவில் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என எலன் மஸ்க் அவர்களை டேக் செய்து யூடியூபர் மதன் கெளரி பதிவிட்டு இருந்தார்.
- இறக்குமதி வரியை குறைக்க கோரி எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
அதை பிரதிபலிக்கும் விதமாக பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெஸ்லா கார்களை இந்தியாவில் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என எலன் மஸ்க் அவர்களை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்
அந்த பதில் ட்வீட்டில், ” நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இறக்குமதி வரிகள் இந்தியாவில், எல்லா நாட்டையும் விட அதிகம். மேலும், சுற்று சூழலை பாதிக்காத எரிசக்தி வாகனங்கள் மீதான வரி கூட, டீசல் அல்லது பெட்ரோல் வாகங்களை போலவே போடப்படுகின்றன. இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுக்கு முற்றிலும் மாறானதாக உள்ளது. எனினும், மின்சார வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிகமாக சிறிது நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் ” என எலன் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளித்துள்ளார்.