Pegasus விவகாரம்: அவையில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட TMC MP இடைநீக்கம்

நேற்று பெகாசஸ் (pegasus) விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ​​தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் பிரச்சினையில் அறிக்கையை வெளியிட அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

புதுடெல்லி: நேற்று பெகாசஸ் (pegasus) விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ​​தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் பிரச்சினையில் அறிக்கையை வெளியிட அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் பெருத்த கூச்சலும், குழப்பமும் நிலவியது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து எறிந்தார். 

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெகாசஸ் அறிக்கையை பறித்துக் கிழித்த மோசமான நடவடிக்கை காரணமாக, மாநிலங்கள் அவையில் மழைக்கால கூட்டத் தொடரின்  மீதமுள்ள காலத்தில், கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வி. முரளீதரன் இதற்கான் தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, எம்பி சென் அவர்களை சபையை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.