விவசாயிகள் போராட்டம், பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தவுள்ளதா காங்கிரஸ்
விவசாயிகளின் போராட்டம் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் ஆகிய பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் போராட்டம்.
புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டம் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் ஆகிய பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) போராட்டம் நடத்தவுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு, நாடாளுமன்றக் கட்சி (CPP) அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள்.
முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்னால் மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பெகாசஸ் ஸ்பைவேரைப் (Pegasus Spyware) பயன்படுத்தி கண்காணிப்பு நடத்தப்பட்டதாக வந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உச்சநீதிமன்ற விசாரணையை கோரி காங்கிரஸ் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு பேரணிகளை நடத்தியது.