ஆகஸ்ட் 1 முதல் ஊதியம், ஓய்வூதியம், EMI கட்டணத்துக்கு புதிய விதி: RBI செய்த மாற்றம்…

ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

  • ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் விதிகளை மாற்றியுள்ளது.
  • கொரோனா தொற்று பரவியுள்ள இந்த காலங்களில் இது பயனாளிகளுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும்.
  • இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் முக்கிய சேவைகளைப் பெற முடியும்.

New RBI Rules: மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

அதாவது, இப்போது நீங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கடந்து செல்ல காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் சம்பளம் (Salary) அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.