TNPL 2021: நெல்லை vs திருச்சி; முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி
டிஎன்பிஎல் போட்டியின் நெல்லை மற்றும் திருச்சி அணி ஆடிய ஆட்டத்தில் திருச்சி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி 2 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் நேற்று 3வது லீக் (TNPL 2021) போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors) அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. இந்த லீக் போட்டியில் அதிகபட்சமாக அமித் சாத்விக் 71 ரன்கள் எடுத்தார். ஆதித்ய கணேஷ் 33 ரன்களும், அந்தோணி தாஸ் 35 ரன்கள் எடுத்து இருந்தனர்.
இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெல்லை அணி. 6வது விக்கெட் ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடினர். ஆனால், சஞ்சய் யாதவ் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பாபா இந்திரஜித் 32 ரன்களில் அவுட் ஆனார்.
நெல்லை அணி 13.4 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் திருச்சி அணி முதலிடத்தில் உள்ளது.