Pegasus Spyware வெளிப்பாடுகளால் எங்களுக்கு பிரச்சினை இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, பெகாசஸ் பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறியுள்ளார்.
பெகாசஸ் பயனர்களின் (Pegasus Users) கண்காணிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக புலனாய்வு அறிக்கைகள் கூறியுள்ள 45 நாடுகளின் கசிந்துள்ள சுமார் 50,000 தொலைபேசி எண்களில் ரஷ்ய நாட்டவர்களின் பெயர்கள் இதுவரை பட்டியலிடப்படவில்லை.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய (Russia) பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, இந்த பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறினார்.