பள்ளிக்கரணை S-10 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் வாகன பரிசோதனை!!

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்கள் கொரோனவைரஸ் ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவித்திருந்த நிலையில், சாலையில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை, மேலும், காவல்துறை ஆணையர் திரு/சங்கர் ஜிவால், ஐபிஎஸ், உத்தரவுபடி தமிழகத்தில் காவல்துறை சார்பில் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து வாகன பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணை S-10 காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு/குமார் அவர்கள் தலைமையில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை எதிரில் உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் தலைமைக் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன பரிசோதனையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம், ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் அசல் சான்றிதழ்,
இன்ஷூரன்ஸ்,
ஆகியவை பரிசோதனை செய்து தகுந்த சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

NEWS: S MD.ரவூப்

Leave a Reply

Your email address will not be published.