எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி. நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.

12.மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கியது. இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12.மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.MG. தமீம் அன்சாரி

முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.