அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு- OPS.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- அவருக்கு சொந்தமான 22 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
- ஊழல்கள் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- எங்களை அச்சுறுத்தவே அமைச்சர் வீட்டில் சோதனையை திமுக அரசு நடத்துகிறது.
– அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை.
– திமுக அரசு (DMK Govt) பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
– திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
– பொய் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை.
– சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.
– எங்களை அச்சுறுத்தவே அமைச்சர் வீட்டில் சோதனையை திமுக அரசு நடத்துகிறது.
– எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயார்.