600 கி.மீ., வேகத்தில் செல்லும் மின்காந்த ரயில் – சீனாவில் அறிமுகம்!
உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.
- உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயில்
- சீனாவில் அறிமுகம்
அண்டை நாடான சீனாவில் உலகிலேயே மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய தரைத்தள ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுவதுமாக மின்காந்த புலத்தால் இயக்கப்படுகிறது. இதனை சீனாவின் கிங்டாவ் பகுதியில் தயாரித்துள்ளனர்.
இந்த ரயிலானது இயக்கப்படும் போது தண்டவாளத்திலிருந்து மேலே எழும்பி செயல்படுகிறது. மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இதனை தயாரித்துள்ளனர். அதுவும் குறிப்பாக பெய்ஜிங் நகரத்திலிருந்து ஷாங்காய் நகர் வரை உள்ள 1000 கிலோ மீட்டர் தூரத்தை இந்த மின்காந்த ரயிலின் மூலமாக 2.5 மணி நேரத்தில் செல்ல முடியும்.