50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் போகும் ஹைடெக் சைக்கிளை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாஸ்கரன் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
- பெட்ரோல் விலையின் தொடர் ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் கவலை.
- அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பேட்டரியில் ஓடும் சைக்கிளை விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
- ஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை ஓடும் வகையில் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
250 வாட்ஸ் மற்றும் 24 வோல்ட் திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த பேட்டரி சைக்கிளை முழுமையாக செய்து முடிப்பதற்கு 20,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது என்றும் கூறுகிறார் பாஸ்கர்.
இதில் அதிகபட்சமாக 30 கி.மீ. வேகம் வரை செல்ல முடியும் என்றும், மோட்டாரில் இயங்கும்போது அவ்வப்போது நாமும் பெடல் செய்தால் கூடுதலாக மைலேஜ் கிடைக்கும் என்பது இதனுடைய சிறப்பாக உள்ளது. இந்த கண்டுபிடிப்பு விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பாஸ்கருக்கு பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.