ரேஷன் கார்டு அப்டேட்: செப்டம்பர் 30க்குள் இதை செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும்…
ரேஷன் பொருட்கள் தடையின்றி பெற இந்த முக்கிய வேலையை செய்து முடிக்க மேலும் இரண்டு மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி நேற்று முன்தினம் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டையுடன் ஆதாரை எப்படி இணைப்பது
* ஆன்லைன் : (https://www.uidai.gov.in) இந்த அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
* ஆன்லைன் வசதியில்லாமல் நேரிடையாக ரேஷன் கடையிலேயே எளிமையாக இதனை செய்துகொள்ள முடியும்