இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
இஸ்லாமிய மக்களின் தியாகத் திருநாள்! புனித ஹஜ் பெருநாள்
( பக்ரீத் பண்டிகை)
தியாகத் திருநாள் ( அரபு: عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.
இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும்
தியாகத் திருநாள்
அதிகாரப்பூர்வ பெயர்
தியாகத் திருநாள், ஈத் அல்-அழ்ஹா
பிற பெயர்(கள்)
பக்ரித் பண்டிகை,
ஹஜ் பெருநாள்
முக்கியத்துவம்
இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகின்றது.
அனுசரிப்புகள்
தொழுகை, பலியிடல், தானம்.
தொடக்கம்
10 துல் ஹஜ்
முடிவு
13 துல் ஹஜ்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் 5 ஆகும்,
(1) கலிமா,
(2) தொழுகை,
(3) நோன்பு,
(4) ஜக்காத்
(5) ஹஜ்,
ஐந்து கடமைகளாகும்.
வசதியுள்ள முஸ்லிம்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது, கடமையாகும்
புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும்.
இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அழ்ஹா என்றே அழைக்கப்பட்டாலும், இந்திய நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் (பக்ரா + ஈத்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படு கின்றது.
NEWS: S.MD.RAWOOF