வலிமை ரிலீசுக்கு முன்பே துவங்கும் தல 61 படப்பிடிப்பு: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
அஜித்குமார், எச்.வினோத், போனி கபூர் மூன்றாவது முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது ’வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல 61 படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக வலிமை திரைப்படத்திற்கு முன்பாகவே தல 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.