தி.நகர், டாக்டர் நாயர் சாலையில் கழிவுநீர் செல்லும் பைப்லைன் உடைந்து சாலை மூடப்பட்டது.
தி.நகர் நாயர் சாலை மூடப்பட்டது :
சென்னை : தி.நகர், டாக்டர் நாயர் சாலையில் கழிவுநீர் செல்லும் பைப்லைன் உடைந்து சாலை முழுவதும் சாக்கடை நீர் வழிந்து வருவதால் அந்தச்சாலை மூடப்பட்டது.
தி.நகர் பகுதி மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து நேரில் ஆய்வு செய்து, உடைந்த கழிவுநீர் பைப்லைனை சரி செய்வதற்காக JCB மூலம் சாலைகளை தோண்டி அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதனால் அந்தவழியாக போக்குவரத்து செல்லாதவாறு வழிகள் அடைக்கப்பட்டு மாற்றுப்பாதைகள் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்