டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.