சாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்…
கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பரவியதால் அங்கு கூடியிருந்த மக்களால் வேகமாக வெளியேற முடியவில்லை.
விபத்துக்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க சென்றபோது 13 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் கென்யாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிஸூமு பகுதியில் பால் வண்டியும், பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரி சாலையில் இருந்து விலகி அருகில் கவிழ்ந்தது. டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் வெளியேறுவதை கண்ட அப்பகுதி மக்கள் விபரீதத்தை உணராமல் கைகளில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.