வினோதமான முறையில் ஆட்டமிழந்த டெய்லர்…இப்படியும் அவுட் கொடுக்கலாமா? ஷாக் சம்பவம்…
25ஆவது ஓவரில் ஷொரிபுல் இஸ்லாம் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட பிரண்டன் டெய்லர், அதை தேர்ட் மேன் திசையை நோக்கி அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து அவரிடம் இருந்து தப்பித்து, விக்கெட் கீப்பர் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. ஏமாற்றத்தில் இருந்த டெய்லர், விரக்தியில் பேட்டை பின்னோக்கி வீசினார். அது எதிர்பாராத விதமாக ஸ்டெம் மேல் மோதியது. டெய்லரும் இதைக் கண்டும் காணாத மாதிரி இருந்தார்.