பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து நெல்லையில் போராட்டம்.!
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் கண்டன உரை. சாமானியர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந்துள்ளது.
விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பேட்டையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் இரா.முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
மேலும் மஜக மாநில துணைசெயலாளர் A.R.சாகுல்ஹமீது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தென்மண்டல பொறுப்பாளர் நெல்லை செல்வம், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மஜக மாநில பொருளாளர் அவர்கள் ஒன்றிய அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி புரிவதாகவும், தினம் தினம் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு கட்டுபடுத்த தவறினால், நாடு மிகப்பெரிய மக்கள் எழுச்சி போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இப்போராட்டத்தில் மாவட்ட அணி நிர்வாகிகள் பத்தமடை கனி, புகாரி, ராபியாசேக், நெல்லை ஜாஹிர், முருகேசன், அப்பாஸ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சியினர் என திரளானோர் கலந்துகொண்டனர்.
அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்