பிரச்சினைகளுடன் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்..
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்தது. மேலும் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால (Monsoon Session of Parliament) கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13 ஆம் தேதி முடிகிறது. இந்த மழைக்காலத் கூட்டத்தொடரில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ஒரு கை பார்க்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக உள்ளன. முதல் நாளான இன்று மக்களவை, மாநிலங்களவை என இரு சபைகளிலும், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி (PM Modi) அறிமுகம் செய்து வைப்பார். மேலும் மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.பி.க்களும் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.