பாட்டி வைத்தியம்!

அனைத்து வைரஸ்களையும் செத்து போக செய்யும் ,இந்த பத்து பாட்டி வைத்தியத்தை கத்துக்கோங்க

  1. தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து

ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

  1. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2

லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

  1. பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை

வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

  1. நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன்

சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

  1. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
  2. கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி,

அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

  1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
  2. மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க

வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

  1. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில்

உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

  1. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில்

குடிக்க வயிற்று வலி நீங்கும்.

இயற்கையிலேயே உடலானது தன்னைத்தானே பேணிப் பாதுகாத்துக் கொள்ளும்போது மனித மனமும், இயற்கை வழி நின்று இந்த உடலுடன் ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் ஐம்பெரும் மூலகங்களான விண், மண், காற்று, தீ, நீர் ஆகியவற்றுடன் ஐக்கியமாகி இருக்கும் இயற்கை உணவுகளை உண்டு நோய் நொடியின்றி வாழலாம்.

செய்தி:S.MD., RAWOOF

Leave a Reply

Your email address will not be published.