திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை விடிய விடிய அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் தங்கம் கடத்தல் உள்ளிட்டவை கண்டறியப்பட்டது.இந்நிலையில் ஷார்ஜாவிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதில் கடத்தல் தங்கத்தை பெற்று கொள்ள வந்த ஏஜண்ட்களைச் அதிகாரிகள் சுற்றி சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.
